Friday, November 13, 2009

நட்பு.

நான் அமெரிக்காவில் இருக்கிறேன். என் நண்பன் சென்னையில் இருக்கிறான். எனக்கு இங்கு பகல் அங்கு இரவு. என் நண்பன் தினமும் நடு இரவு தாண்டியும் தூங்காமல் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பான்.
அவனோடு பேசிக்கொண்டே இண்டர்நெட்டில் நட்பைப் பற்றிய கவிதைகளை தேடிக்கொண்டு இருந்தேன் அப்போது சிக்கியது இது. என் நினைவிற்கு மிக பொருத்தமாக இருந்தது. அது இதுதான்.




“உலகிற்கு ஒளி தரும் சூரியனே உறங்க சென்று விட்டது"

“என் உயிர்க்கு ஒளி தரும் நட்பே நீ மட்டும் ஏன் விழித்திருக்கிறாய் போய் கண் உறங்கு" GOOD NIGHT…! sweet dreams..

நட்பு கவிதைகள்.

நீ விரும்பும் நட்பு உன்னிடம் நிறைய எதிர் பார்க்கும்.
ஆனால் உன்னை விரும்பும் நட்பு உன்னை மட்டுமே எதிர் பார்க்கும்!...


விரும்பும் நெஞ்சம் அருகில் இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன?
தொலையாத நினைவுகள் உள்ளவரை தொலைவும் வெகு அருகில் தான்.



ரோஜாக்கு நிறம் உண்டு!
முல்லைக்கு மணம் உண்டு!
எனக்கு இதயம் உண்டு!
அதில் என்றும் உனக்கு இடம் உண்டு!
நட்புடன்
உன் அன்பு நண்பன்.




அன்பை சுமக்க இதயம் உண்டு,
கண்ணீரை வடிக்க கண்கள் உண்டு,
கடமை முடிக்க கைகள் உண்டு,
என்றும் உன்னை நினைக்க நான் உண்டு
என் அன்பு நண்பா!




நிலையான‌ அன்புக்கு பிரிவில்லை...
சொல்லாத சொல்லுக்கு அர்த்தம் இல்லை.…
தேடும் பாசத்துக்கு தோல்வி இல்லை..
உண்மையான நமதின் நட்புக்கு மரணம் இல்லை…
நான் ரோஜாவை போல அழகானவன் இல்லை…
அனால் என் இதயம் ரோஜாவை விட அழகானது ஏன் தெரியுமா?
அதில் நீயும் உன் நட்பும் இருப்பதால்..




சிங்கத்தை யாராலும்
கொஞ்ச முடியாது
நம் நட்பை யாராலும்
மிஞ்ச முடியாது!

நீரில் குளித்தாலும்,
நெருப்பில் எரிந்தாலும்,
தங்கம் நிறம் மாறாது.
அதுபோல் நீ அருகில் இருந்தாலும்,
தொலைவில் இருந்தாலும்,
என்றுமே என் நட்பு மாறாது.



நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்...
ஆனால் முடியவில்லை.
ஏன் தெரியுமா?
ரோஜாவை வரைந்து விடலாம்.
அதன் வாசத்தை எப்படி வரைய முடியும்?


அழகு இருந்தால் வருவேன் என்றது காதல்
பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு
இதுதான் நட்பு
.



“பிரிந்து இருந்தாலும் மறந்து இருப்போம் பிரிவுகளை மட்டுமே நினைவுகளை அல்ல..



நட்பு கடல் மாதிரி,
எல்லா இடத்துலயும் இருக்கும்.

நட்பு என்பது நடிப்பு அல்ல,
நம் நாடி துடிப்பு.

எத்தனை நாட்கள் சந்தித்தோம் என்பதை விட,
எப்போது சந்திப்போம் என்று “இதயம் துடிப்பதே”
உண்மையான நட்பு..

ரோஜா தோட்டத்தில் பூக்கள் எப்படி பூத்து குலுங்குகிறதோ,
அதை போல் உன் முகத்தில்
சிரிப்பு என்ற பூவை மட்டும் தான் நான் பார்க்க வேண்டும்.